அதிரை வரலாறு ! - ஒரு வலைப்பூ(தளம்)
>> Thursday, 11 November 2010
வரலாறு படைத்தவர்கள் பல்லாயிரம் உண்டு அதில் வரலாறாக பதிவுக்குள் வந்தவைகள்தான் இன்றளவும் பேசப்பட்டும் போற்றப்படும் வருகிறது.
எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து அதாவது வாசிக்கும் ஆர்வம் எழுந்த சூழலிருந்து நல்லதையும் கெடுதலையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டி வந்தேன் என் மாமா அவர்களின் நல் வழிகாட்டல் நல்லதை எப்படி அனுக வேண்டும் கெடுதலை எப்படி ஒதுக்க வேண்டும் என்றும் கற்றுக் கொடுத்தது இன்றும் அப்படியே.
பள்ளி நாட்களில் அன்று எங்களின் நன்மதிப்பை பெற்ற ஆசிரியர் ஜனாப் ஷேக் தாவுத் (கணிதம்) அவர்கள் வகுப்புக்குள் வந்து விட்டால் கண்டிப்பாக ஒரு வரலாறு எங்களுக்கு சொல்லப் படும் அதுவும் வீர வரலாறு, நாடுகளில் ஏற்பட்ட புரட்சி, சஹாபாக்களின் ஆட்சிமுறை, இஸ்லாமிய ஆட்சி, தாய் தந்தையரிடம் எப்படி நடப்பது, பொது இடங்களில் எப்படியிருப்பது இப்படி நிறைய அவர்களிடமிருந்து தெரிந்து கொண்டிருக்கிறோம்.
நாமாகத் தேடிப் போய் வாசிக்கும் பழக்கும் சிறிது குறைந்தாலும் ஆங்காங்கே கிடைக்கும் அல்லது சந்தர்ப்பமாக அமையும்போதெல்லாம் வாசித்தும் வந்தோம், அதிலும் குறிப்பிட்ட சில வாரப் பத்திரிக்கைகள், தினப் பத்திரிக்கை, மாதப் பத்திரிக்கைகளில் அறிந்தும் வந்தோம். 90களில் நமது ஊரிலிருக்கும் அனைத்து பள்ளிவாசல் பற்றியும் அவற்றின் பழமை பற்றியும் தொகுக்கலாம் அதனை வலைத்தளங்களில் வெளியிடலாம் என்று ஆவல் எழுந்து அதற்கான முயற்சியும் எடுத்தோம் இதில் எனது சின்ன மாமா அவர்களின் பங்களிப்பும் ஆர்வமும் இருந்தது இருப்பினும் இந்த முயற்சி ஈடுபாட்டாளர்களின் வெளிநாட்டுப் பயணம் குறிக்கிட்டு தடைபட்டுப் போனது. இந்த சந்தர்ப்பத்தில்தான் அதிரையின் ஆதி வரலாறும் தேட ஆரம்பித்தோம் ஆனால் அன்று இந்த மாதிரியான ஊடகம் இல்லை நூலகங்களுக்கு செல்லாமலே எதனையும் எடுக்க முடியாது என்பதும் தெரிந்ததே, ஆக வேறு வழி தானாக கிடைத்தால் வாசிக்கும் பழக்கமிருந்ததால் அதுவும் அப்படியே விடுபட்டது.
மாஷா அல்லாஹ் இன்று இந்த நவீன மின்வலைப் பூக்களின் வருகையால் என் நெருங்கிய நட்பின் இளைய கடைக்குட்டிச் சகோதரனின் முயற்சியும், ஆர்வமும் அவருக்கு பக்க பலமாக இருக்கும் எங்கள் "அதிரை அஹ்மது" அவர்களும் மற்றும் நம் சகோதரர்களின் அமோக ஆதரவில் "அதிரை வரலாறு" என்றொரு வலைப்பூ தளம் வெற்றியுடன் மனம் வீச ஆரம்பித்து இருக்கிறது, இவர்களின் ஆழ்ந்த தேடல் நமக்கு நல்லதொரு வரலாற்றுச் சான்றுகளை தருகிறது.
அதிரை வரலாறு தொடர்ந்து நாம் வாசிக்க வேண்டும் அதில் நல்லதை ஊக்கப்படுத்துவோம் அதில் நம்பகத் தன்மையிருப்பின் அதனை அப்படியே பதிவு செய்வோம், அல்லது மாற்றுக் கருத்துக்களிருந்தால் அல்லது வேறு ஆதாரங்களிருந்தால் அதனை அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று சரிப்படுத்துவோம், விமர்சனக் குட்டும் வைப்போம்.
எது எப்படியிருந்தாலும் இந்த சிறப்பான முயற்சி தொடரவும் வெற்றியடையவும், நம் சமுதாய நலனையே நன்மையாக கருதியே இந்த வரலாறு அமையவும் வாசிப்போம் வாழ்த்துவோம்.
- அபுஇபுறாஹீம், அதிரைப்பட்டினம்
நன்றி:அதிரைநிருபர்